மேலும் செய்திகள்
அலங்காநல்லுார் வரம் தரும் விநாயகர் கோயில் கும்பாபிஷேகம்
2793 days ago
ஓணம் பண்டிகை : போடி ஐயப்பன் கோயிலில் சிறப்பு வழிபாடு
2793 days ago
விலங்கல்பட்டு சிவசுப்பரமணியர் கோவிலில் திருக்கல்யாணம்
2793 days ago
சூரியன் ஒவ்வொரு ராசியிலும் ஒவ்வொரு மாதம் சஞ்சரிக்கிறார். அதில், மகர ராசிக்குள் அவர் நுழையும் நாளை தைப்பொங்கல் என்று குறிப்பிடுவர். வடநாட்டில் இதை மகர சங்கராந்தி என்பர். இந்நாளில் வீட்டு வாசலில் கோலம் இட்டும், மாவிலைத் தோரணம் இட்டும் அலங்கரிப்பர். மார்கழி மாதத்தின் கடைசி நாளான போகியன்று பழைய பொருள்களை தீயிட்டுக் கொளுத்துவதும் வீட்டின் தூய்மைக்காகவே. வேண்டாத பழமையை விலக்கி, புதுமையை வரவேற்கும் விதமாக பொங்கல் அமைந்துள்ளது. அதனால், வாழ்வில் முன்னேறுவதற்கான வழிவகை உண்டாவது இயற்கை. இதனால் தான், தை பிறந்தால் வழி பிறக்கும் என்ற சொல்வழக்கு ஏற்பட்டது. வயலில் விளைந்த புது நெல்லில் குத்திய அரிசியில் பொங்கலிட்டு, கண் கண்ட தெய்வமான சூரியனுக்குப் படைப்பர். பொங்கல் பானையில் பொங்கும்போது, பொங்கலோ பொங்கல் என்று ஒலி எழுப்புவர். ஒருமித்த குரலில், இதைச் சொல்லும்போது, எல்லா மங்களங்களும், நன்மைகளும் வீட்டிற்கு வந்து சேரும் என்பது ஐதீகம்.
2793 days ago
2793 days ago
2793 days ago