உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மாட்டுப்பொங்கல் கொண்டாட்டம் ஏன்?

மாட்டுப்பொங்கல் கொண்டாட்டம் ஏன்?

வாயில்லா ஜீவன் என்று பசுவைச் சொல்கிறோம். ஆனாலும், விலங்கினங்களில் பசு இனம் மட்டுமே அடிவயிற்றிலிருந்து அம்மா என்று  அழைத்து, அன்பை வெளிப்படுத்துகிறது. அம்மா என்ற சொல்லுக்கு, அன்பால் தன் குழந்தைக்கு பாலூட்டி சீராட்டுபவள் என்று பொருள்.  ஆனால், பெற்றவள் இளம் வயதில் மட்டுமே பால் தருவாள். பசுவோ, இளம் வயது முதல் முதுமை வரை நமக்கு பால் தருகிறது. அது  மட்டுமல்ல! மனிதனுக்கு உயிர் போன பின்பும் கூட பாலூற்றுதல் என்ற சடங்கு உண்டு. இப்படி, நம்மோடு என்றும் பிரிக்க முடியாத  உறவாக இருப்பதால் பசுவைக் கோமாதா என்று போற்றி வழிபாடு செய்கிறோம். காளை நம் வயல்களை உழுகிறது, அறுவடைப்  பணியில் உதவுகிறது. வண்டி இழுக்கிறது. உழைப்பின் சின்னமாய் விளங்குகிறது. அவற்றுக்கு நன்றி செலுத்தும் நாளே மாட்டுப்பொங்கல்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !