உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ராமகிருஷ்ண மிஷன் வித்யாலயத்தில் சுவாமி விவேகானந்தர் ஜெயந்தி விழா

ராமகிருஷ்ண மிஷன் வித்யாலயத்தில் சுவாமி விவேகானந்தர் ஜெயந்தி விழா

பெ.நா.பாளையம்:பெரியநாயக்கன்பாளையம் ராமகிருஷ்ண மிஷன் வித்யாலயத்தில் நடந்த சுவாமி விவேகானந்தர் ஜெயந்தி விழாவில், அவரது உடை அணிந்து பள்ளி மாணவர்கள் அசத்தினர்.பெரியநாயக்கன்பாளையம் ராமகிருஷ்ண மிஷன் வித்யாலயத்தில், ஆண்டுதோறும் சுவாமி விவேகானந்தர் ஜெயந்தி விழா, கொண்டாடப்படுகிறது. விழாவையொட்டி விவேகானந்தர் உருவச்சிலை ரதத்தில் அலங்கரிக்கப்பட்டு ஊர்வலம் நடந்தது. ராமகிருஷ்ண மிஷன் வித்யாலய குருகுல பள்ளி மாணவர்கள், 52 பேர் சுவாமி விவேகானந்தர் உடை அணிந்து ஊர்வலத்தில் பங்கேற்றனர்.பேரணியில் பங்கேற்ற இவர்கள் சுவாமி விவேகானந்தரின் கருத்துக்களை எடுத்துரைத்து சென்றனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ராமகிருஷ்ண மிஷன் வித்யாலய நிர்வாகம் செய்திருந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !