பொங்கல், தைப்பூச திருவிழா: பழநி இடும்பன் குளத்தில் குவிந்த பக்தர்கள்
ADDED :2858 days ago
பழநி: தைப்பூச விழாவையொட்டி பாதயாத்திரையாக வரும் பக்தர்கள் பழநி இடும்பன் குளத்தில் நீராடி பழநிமலைக்கோயிலுக்கு சென்றனர்.
பழநி ஞானதண்டாயுத பாணிசுவாமி கோயில் தைப்பூச விழா ஜன.25ல் துவங்கியது. தொடர்ந்து பிப்.,3வரை நடக்கிறது. தற்போது பொங்கல் பண்டிகை தொடர் விடுமுறையை முன்னிட்டு மதுரை, திருச்சி, புதுக் கோட்டை, சிவகங்கை உள்ளிட்டபகுதிகளை சேர்ந்த பக்தர்கள் திரளாக வந்தவண்ணம் உள்ளனர். இவ்வாறு வரும் பக்தர்கள் பழநி இடும்பன்குளத்தில் நீராடி, இடும்பனை வழிபட்டு, பின் பழநிமலைக்கோயிலுக்கு செல்கின்றனர். இவ்வாண்டு இடும்பன்குளத்தில் தண்ணீர் நிறைய உள்ளது. இங்கு பக்தர்கள் அதிகாலை முதல் ஏராளமான பகதர்கள் நீரடி வழிபட்டு வருகின்றனர். பக்தர்களுக்காக கோயில் நிர்வாகம் சார்பில் மின்வசதியுடன் கூடிய நிழற்பந்தல்கள், குடிநீர் வசதிகள் செய்யப்பட்டுள்ளன.