உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருவண்ணாமலையில் உத்ராயண புண்ணிய கால தீர்த்தவாரி

திருவண்ணாமலையில் உத்ராயண புண்ணிய கால தீர்த்தவாரி

திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், கடந்த, 5ல், உத்ராயண புண்ணியகால கொடியேற்றம் நடந்தது. இதை தொடர்ந்து, தினமும் காலை, மாலை என, இரு வேளைகளிலும் விநாயகர் மற்றும் சந்திரசேகரர் வீதி உலா வந்து, பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். நேற்று காலை, தாமரைக்குள கரையில், விநாயகர், சந்திரசேகரர் எழுந்தருளி, பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். பின், தீர்த்தவாரி நடந்தது. இதை தொடர்ந்து, விநாயகர், சந்திரசேகர் சுவாமி வீதி உலா வந்து, பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். இன்று, அருணாசலேஸ்வரர், உண்ணாமுலையம்மனுக்கு இடையே ஏற்படும் ஊடலை நினைவு கூறும் வகையில், திருவூடல் உற்சவம், 16ல், சுவாமியும், அம்மனும் ஒன்று சேருவதை நினைவு கூறும் வகையில், மறுவூடல் உற்சவம் நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !