பழையசீவரத்தில் வரதர் பார்வேட்டை உற்சவம்
ADDED :2932 days ago
பழையசீவரம்: பழையசீவரம் பார்வேட்டை உற்சவம் நேற்று, கோலாகலமாக நடந்தது. வாலாஜாபாத் அடுத்த, பழையசீவரம் கிராமத்தில், லட்சுமி நரசிம்மப்பெருமாள் கோவில் உள்ளது. இங்கு, ஆண்டுதோறும் காஞ்சிபுரம் வரதராஜப்பெருமாள் பார்வேட்டை உற்சவத்தில் எழுந்தருளுவார்.நடப்பாண்டு பார்வேட்டை உற்சவத்தை முன்னிட்டு, நேற்று முன் தினம் இரவு காஞ்சிபுரம் வரதராஜப்பெருமாள் கண்ணாடி பல்லக்கில் புறப்பட்டு பழையசீவரம் கோவிலை வந்தடைந்தார். நேற்று காலை, அவருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனைக்கு பிறகு, மலை மீது இருக்கும், உற்சவ மண்டபத்தில் வரதர் எழுந்தருளினார். பழையசீவரம் கிராமத்தை சுற்றியுள்ள, பல கிராமப்புற மக்கள் வரதரை வழிபட்டு சென்றனர்.