உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சாரதாம்பிகை கோவிலில் திருவிளக்கு வழிபாடு

சாரதாம்பிகை கோவிலில் திருவிளக்கு வழிபாடு

மேட்டுப்பாளையம்; தைப்பொங்கல் விழாவை முன்னிட்டு, காரமடை கன்னார்பாளையத்தில் உள்ள அம்பாள் சாரதாம்பிகை கோவிலில், 32வது ஆண்டு திருவிளக்கு வழிபாடு பூஜைநடந்தது. விழாவில், சாரதாம்பிகை அம்பாளுக்கு பொங்கல் வைத்து, அபிேஷக, அலங்கார பூஜைகள் செய்யப்பட்டன. கோவில் வளாகத்தில் உள்ள சித்தி விநாயகர், மகாசக்தி மாரியம்மன், ஸ்ரீதேவி, பூதேவி சமேத சீனிவாசப் பெருமாள் ஆகிய சுவாமிகளுக்கு அலங்கார, அபிேஷக பூஜைகள் செய்யப்பட்டன.விழாவை முன்னிட்டு கோவிலில் திருவிளக்கு வழிபாடு நடந்தது. இதில் நுாற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் பங்கேற்றனர். இந்து சமய மகளிர் மன்றத்தை சேர்ந்த மரகதம், செயலாளர் சாந்தா ஆகியோர், திருவிளக்கு வழிபாட்டை நடத்தினர். ராமகிருஷ்ண வித்யாலய சுவாமி யோகாம்ருதானந்தர் ஆசியுரை வழங்கினார். பொங்கல் விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கும், விளக்கு பூஜையில் பங்கேற்றவர்களுக்கும் பரிசுகள் வழங்கப் பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !