ஐயப்பன் கோவிலில் ஜோதி தரிசனம் பூஜை
ADDED :2933 days ago
சூலுார்;சூலுார் அடுத்த காங்கயம்பாளையம் ஐயப்பன் கோவிலில் மண்டல மகர விளக்கு திருவிழா நடந்தது. நேற்று முன்தினம் மாலை நிறைமாலை, சுற்று விளக்கு, மகர சங்கரம பூஜை நடந்தது. ஜோதி தரிசன பூஜை நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று வழிபட்டனர். தொடர்ந்து பஜனை மற்றும் அன்னதானம் நடந்தது.