நன்மை தருவார் ஐயப்பசுவாமி கோயிலில் மகரஜோதி விழா
ADDED :3158 days ago
ஆண்டிபட்டி, சக்கம்பட்டி நன்மை தருவார் ஐயப்பசுவாமி கோயிலில் மகரஜோதி விழா நடந்தது. இக்கோயிலுக்கு நேர் எதிரே உள்ள டி.சுப்புலாபுரம் நாழி மலையில் ஐயப்பசுவாமி கோயில் சார்பில் மகரஜோதி ஏற்றி வழிபாடு செய்து வருகின்றனர். நேற்று முன்தினம் நடந்த விழாவில் ஐயப்ப சுவாமிக்கு சிறப்பு அபிேஷகம், ஆராதனைகள் நடந்தது. மாலை 6:30 மணிக்கு மலை உச்சியில் மகரஜோதி ஏற்றி சரண கோஷத்துடன் ஐயப்ப சுவாமியை வழிபட்டனர்.
அன்னதானம் நடந்தது. முல்லை பெரியாறு அணை பிரச்னையில் கடந்த சில ஆண்டுக்கு முன் சபரி மலை செல்ல முடியாத பக்தர்கள் நன்மை தருவார் கோயிலில் விரதத்தை முடித்தனர். இங்கு மகரஜோதி தரிசனம் 2011 ல் இருந்து நடக்கிறது.