உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கரூர் முருகன் கோவிலில் சப்பர திருவிழா

கரூர் முருகன் கோவிலில் சப்பர திருவிழா

கரூர்: கரூர் மாவட்டம், சின்ன தாராபுரம் அடுத்த, எலவனூர் முருகன் கோவிலில், சப்பர திருவிழா விமரிசையாக நடந்தது. விழாவை முன்னிட்டு, ஐம்பொன்னால் ஆன முருகன், வள்ளி, தெய்வானை சிலைகளுக்கு, பால், பன்னீர், இளநீர், சந்தனம், விபூதி, திருமஞ்சனம் உள்ளிட்ட பலவகையான நறுமண பொருட்களை கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. அதன் பின், மலர்களை கொண்டு, சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்து, தீபாராதனை நடந்தது. பின், வள்ளி தெய்வானை சமேதராக முருகன் சப்பரத்தில் ஊர்வலம் சென்றார். சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !