மந்தரத்துடன் ஓம் சொல்லுங்க!
ADDED :3006 days ago
சப்த அலைகளால் உருவானதே இந்த பிரபஞ்சம் (உலகம்). உலகின் முதல் ஒலியாக இருப்பது ‘ஓம்’ என்னும் ஓங்காரம். இதனை பிரணவ மந்திரம் என்பர். நசி÷ கதன் என்ற சிறுவனுக்கு உயிர்களைப் பறிக்கும் காலதேவனான எமதர்மன் ‘ஓம்’ என்பதன் பெருமையை விளக்கியதாக ‘கடோபநிஷத்’ என்னும் நுõல் தெரிவிக்கிறது. பகவத்கீதை எட்டாம் அத்தியாயம் 13ம் ஸ்லோகத்தில் பிரணவத்தின் பெருமை கூறப்பட்டுள்ளது. ‘ஓம்’ இல்லாமல் சொல்லும் தெய்வ மந்திர ங்களுக்குப் பலன் கிடையாது என்பர். ஓம் நமசிவாய,ஓம் பராசக்தியே நமஹ, ஓம் சரவணபவ, ஓம் சக்திவிநாயக நமஹ என்று பிரணவத்தோடு தான் மந்திரங்கள் தொடங்கும். ஆனால், இதைச் சொல்வோருக்கு மனச்சுத்தம் தேவை. மனத்துõய்மையின்றி சொல்லும் பிரணவத்தாலும் பலனில்லை.