உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கும்பகோணம் அருகே, அணைக்கரை வில்லியாண்டவர் கோவில் கோவில் சிலைகளை பாதுகாப்பு மையத்துக்கு எடுத்து செல்ல கிராம மக்கள் கடும் எதிர்ப்பு

கும்பகோணம் அருகே, அணைக்கரை வில்லியாண்டவர் கோவில் கோவில் சிலைகளை பாதுகாப்பு மையத்துக்கு எடுத்து செல்ல கிராம மக்கள் கடும் எதிர்ப்பு

தஞ்சாவூர்: கும்பகோணம் அருகே, அணைக்கரை வில்லியாண்டவர் கோவில் சிலைகளை, பாதுகாப்பு மையத்துக்கு எடுத்து செல்ல, கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து அதிகாரிகளை முற்றுகையிட்டனர்.

தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் அருகே, அணைக்கரையில், பழமையான வில்லியாண் டவர் கோவில் உள்ளது.

இக்கோவிலுக்கு சொந்தமான, பூர்ணா, புஷ்கலா, வில்லியாண்டவர், அஸ்திரதேவர் உள்ளிட்ட, ஆறு ஐம்பொன்சிலைகளும், ஏழு வெள்ளி கவசங்களும், மாரியம்மன் கோவிலுக்கு சொந்த மான, மூன்று ஐம்பொன் சிலைகளும், அணைக்கரை பொதுப்பணித்துறை அலுவலகத்தில் பாதுகாக்கப்பட்டது.

இதற்கு எவ்வித முன்அனுமதியும் பெறப்படவில்லை என்பது தெரியவந்த நிலையில், உற்சவ சிலைகள், விநாயகம் தெருவில் உள்ள மாரியம்மன் கோவிலுக்கு மாற்றப்பட்டன.

இந்நிலையில், சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐ.ஜி. பொன்மாணிக்கவேல் தலைமையிலான போலீசார், இக்கோவிலில் சில வாரங்களுக்கு முன் ஆய்வு நடத்தினர்.

அப்போது, ஆறு சிலைகள் மட்டும் தான் இருப்பதாக கூறப்பட்டது; மற்ற சிலைகள் குறித்து தெளிவாக தெரிவிக்கப்படவில்லை.

இந்நிலையில், திடீரென நேற்று, மாரியம்மன் கோவிலில் உள்ள சிலைகளையும், வெள்ளி கவசங்களையும், இந்துசமய அறநிலையத்துறையின் செயல் அலுவலர், குணசேகரன், திரு விடைமருதூர் தாசில்தார், ராஜேஸ்வரி மற்றும் பணியாளர்கள், கும்பகோணத்தில் உள்ள உலோக சிலைகள் பாதுகாப்பு மையத்துக்கு எடுத்துச் செல்ல, போலீசாருடன் வந்தனர்.

அப்போது, உற்சவ சிலைகள் எடுத்து செல்வதற்கு கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
அதிகாரிகளை 300க்கும் மேற்பட்டோர் முற்றுகையிட்டனர். ஒருவார கால அவகாசத்தில், நீதிமன்றத்தை நாடி, கோவிலிலேயே சிலைகளை, கிராம மக்களே பாதுகாக்க, உரிய உத்தர வுகளை பெற்று கொள்ளுமாறு அதிகாரிகள் கூறினர்.

இல்லாவிடில், உற்சவ சிலைகளை பாதுகாப்பு கருதி, சிலைகள் பாதுகாப்பு மையத்துக்கு எடுத்துச் செல்வதை தவிர வேறு வழியில்லை என்று கூறிய அதிகாரிகள், அங்கிருந்து புறப் பட்டு சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !