உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ராமேஸ்வரத்தில் சுற்றுலா வழிகாட்ட பயணிகளுக்கு "டூரிஸ்ட் போலீஸ்

ராமேஸ்வரத்தில் சுற்றுலா வழிகாட்ட பயணிகளுக்கு "டூரிஸ்ட் போலீஸ்

ராமநாதபுரம் : ராமேஸ்வரத்தில், சுற்றுலாப் பயணிகளுக்கு வழிகாட்ட டூரிஸ்ட் போலீஸ் நியமிக்கப்பட உள்ளது.

இது குறித்து கலெக்டர் நடராஜன் கூறியது:ராமேஸ்வரத்திற்கு ஆண்டிற்கு 2 கோடி சுற்றுலாப் பயணிகள் வருகின்றனர். சுற்றுலா மேம்பாட்டிற்காக மாஸ்டர் பிளான் தயாரிக்கப்பட்டு ள்ளது. இதற்காக எனது தலைமையில், நகராட்சிகளின் நிர்வாக இயக்குனரை உறுப்பினர் செயலராக கொண்டு, மாவட்ட வன அலுவலர், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் உள்ளிட்ட 30 துறை அதிகாரிகளை உறுப்பினர்களாகக்கொண்ட ராமேஸ்வரம் தீவு வளர்ச் சிக்குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழு கூட்டம் பிப்.,17 ல் ராமநாதபுரத்தில் நடக்கிறது. இதில் சுற்றுலா வளர்ச்சி குறித்து விரிவாக ஆலோசிக் கப்படும்.ராமேஸ்வரம் வரும் சுற்றுலாப்பயணிகளுக்கு வழிகாட்டியாக செயல்பட டூரிஸ்ட் போலீஸ் என்ற பணியில் தகுதியானவர்களை நியமித்து அடையாள அட்டை வழங்கப்படும்.

இயற்கை, கடல் வளம் பாதிக்காத வகையில் சுற்றுச்சாலைகள் அமைக்கவும், கழிவு நீர் கடலில் கலப்பதை தடுக்க 53 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பாதாள சாக்கடை திட்டமும் விரைவில் செயல்படுத்தப்படும்.உச்சிப்புளி ஐ.என்.எஸ்.பருந்து விமானப்படை தளத்தை விரிவாக்கம் செய்து பயணிகள் விமான சேவை துவங்க திட்டமிடப்பட்டுள்ளது. ஓட்டல், தங்கும் விடுதிகளில் கட்டண நிர்ணயம் செய்யப்படும்.இவ்வாறு கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !