கன்னிவாடி நவாப்பட்டியில், வீரசின்னம்மாள், அழகுமலையான்,கும்பாபிஷேகம்
ADDED :2931 days ago
கன்னிவாடி: நவாப்பட்டியில், வீரசின்னம்மாள், அழகுமலையான், மதுரைவீரன், கருப்பணசுவாமி, நாகம்மாள் கோயில் கும்பாபிஷேகம் நடந்தது. முன்னதாக, முகூர்த்தக்கால் நடவு, காப்புக்கட்டுதல் நடந்தது. விநாயகர் வழிபாட்டுடன் யாகசாலை பூஜைகள் துவங்கி, வாஸ்து சாந்தி, யந்திர, நவரத்ன பிரதிஷ்டை, நாடி சந்தானம் உள்பட இரு கால பூஜைகள் நடந்தது.
விசேஷ ஆராதனைகளுக்குப்பின், பூர்ணாகுதி, கடம் புறப்பாடுடன் கும்பத்தில் புனிதநீர் ஊற்றப்பட்டது. அம்மனுக்கு சிறப்பு மலர் அலங்காரத்துடன், மகா தீபாராதனை நடந்தது. விழாவை முன்னிட்டு அன்னதானம் நடந்தது.