குமாரபாளையம் காளியம்மன், லக்ஷ்மிநாராயண சுவாமி,கோவில்களின் உண்டியல் திறப்பு
ADDED :2819 days ago
குமாரபாளையம்: குமாரபாளையம் காளியம்மன், லக்ஷ்மிநாராயண சுவாமி, சவுண்டம்மன் மற்றும் பாண்டுரங்கர் கோவில் உண்டியல்கள் திறக்கப்பட்டு, எண்ணப்பட்டது. இந்து சமய அறநிலையத்துறை ஆய்வாளர் சுந்தர் தலைமை வகித்தார். காளியம்மன் கோவிலில், 59 ஆயிர த்து, 339; பாண்டுரங்கர் கோவிலில், 22 ஆயிரத்து, 135; லக்ஷ?மிநாராயண சுவாமி, காசிவிஸ்வேஸ் வரர், ஆஞ்சநேயர் கோவில்களில், 72 ஆயிரத்து, 647; சவுண்டம்மன் கோவிலில், 11 ஆயிரத்து, 889; பழைய பேட்டை சவுண்டம்மன் கோவிலில், 18 ஆயிரத்து, 137 என, மொத்தம், ஒரு லட்சத்து, 84 ஆயிரத்து, 147 ரூபாய் இருந்தது. பணியில், அர்ச்சகர்கள், பொதுநல ஆர்வலர்கள் பலரும் பங்கேற் றனர். செயல் அலுவலர் பரமேஸ்வரன், சங்ககிரி ஆய்வாளர் சரவணன் உட்பட பலர் உடனிருந்தனர்.