உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / துர்க்கை அம்மன் கும்பாபிேஷக விழா

துர்க்கை அம்மன் கும்பாபிேஷக விழா

வால்பாறை:சின்கோனா துர்க்கை அம்மன் கோவில் கும்பாபிேஷக விழாவில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.வால்பாறை அடுத்துள்ளது சின்கோனா (டான்டீ) இரண்டாம் டிவிஷன். இங்குள்ள ஸ்ரீ துர்க்கை அம்மன் திருக்கோவில் மகா கும்பாபிேஷக விழாவையொட்டி நேற்று மாலை சின்கோனா முதல் பிரிவு மாரியம்மன் கோவில் உட்பட பல்வேறு கோவில்களிலிருந்து கொண்டு வரப்பட்ட புனித நீர் மற்றும் முளைப்பாரியை பக்தர்கள் ஊர்வலமாக எடுத்து சென்றனர். அதனை தொடர்ந்து நேற்று காலை, 10:00 மணிக்கு பல்வேறு கோவில்களிலிருந்து கொண்டுவரப்பட்ட புனித நீரை பக்தர்கள் எடுத்து, கோவிலை வலம் வந்தனர். அதன் பின் கும்பாபிேஷகமும் அம்மனுக்கு சிறப்பு அபிேஷக, அலங்கார பூஜையும் நடந்தது. கும்பாபிேஷக விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !