உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஒற்றை பனைமரத்து காளியம்மன் கோயில் மகா கும்பாபிேஷகம்

ஒற்றை பனைமரத்து காளியம்மன் கோயில் மகா கும்பாபிேஷகம்

ராமநாதபுரம் : ராமநாதபுரம் ஓம்சக்தி நகரில் உள்ள ஒற்றை பனைமரத்து காளியம்மன், மடப்புரம் காளியம்மன், பாண்டிமுனீஸ்வரர் கோயில் மகா கும்பாபிேஷகம் நடந்தது. நுாற்றுக்கணக்கானபக்தர்கள் தரிசனம் செய்தனர். ராமநாதபுரம் ஓம் சக்தி நகரில் ஒற்றை பனைமரத்து காளியம்மன் கோயில், மடப்புரம் காளியம்மன் கோயில், பாண்டி முனீஸ்வரர் கோயில் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு மகா கும்பாபிேஷக விழா நடந்தது. ஜன., 19ல் யாகசாலை பூஜை கணபதி ேஹாமத்துடன் துவங்கியது. அரிமழம் ரவி குருக்கள் தலைமையில் யாக சாலை பூஜைகள் நிறைவடைந்து, நேற்று காலை 9:30 மணிக்கு மகா பூர்ணாகுதி தீபாராதனை நடந்தது. அதன் பின்பு 9:45 மணிக்கு கடம் புறப்பாடு நடந்தது. 10:05 மணிக்கு கோயில் விமானங்களுக்கு மகா கும்பாபிேஷகம் நடந்தது. மூலவர் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு 10:15 க்கு கும்பாபிேஷகம் நடந்தது. பின் சுவாமிகளுக்கு மகாஅபிேஷகமும், திருக்கல்யாணம், மகா தீபாராதனை நடந்தது. இதில் நுாற்றுக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். பகல் 11:00 மணிக்கு பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. மாலை 6:00 மணிக்கு திருவிளக்கு பூஜை நடந்தது. ஏற்பாடுகளை கோயில் நிர்வாக குழுவினர் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !