அகத்தீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம்
ADDED :2825 days ago
சின்ன அய்யங்குளம் : சின்ன அய்யங்குளம் அகத்தீஸ்வரர் கோவிலில், தட்சணாமூர்த்தி மற்றும் பைரவர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டு, கும்பாபிஷேகம் விமரிசையாக நடந்தது. காஞ்சிபுரம் நகராட்சிக்குட்பட்ட சின்ன அய்யங்குளத்தில், ஞானாம்பிகை சமேத அகத்தீஸ்வரர் கோவில் உள்ளது. பழமையான இக்கோவிலில், தட்சணாமூர்த்தி மற்றும் பைரவரருக்கு சன்னதி அமைக்க முடிவெடுக்கப்பட்டது.அதன்படி, இரு சிலைகளும் பிரதிஷ்டை செய்யப்பட்டு, நேற்று கும்பாபிஷேகம் விமரிசையாக நடந்தது. முன்னதாக, நேற்று முன்தினம், விக்னேஸ்வர பூஜை நடந்தது.நேற்று காலை, 9:15 மணிக்கு, கலச புறப்பாடும், 9:30 மணிக்கு தட்சணாமூர்த்தி, பைரவருக்கு கும்பாபிஷேகமும் நடந்தது. இதற்கான ஏற்பாடுகளை விழாக்குழு மற்றும் கிராம பொதுமக்கள் செய்திருந்தனர்.