வீரராகவர் கோவிலில் பிரம்மோற்சவம் நிறைவு
ADDED :2825 days ago
திருவள்ளூர் : திருவள்ளூர் வீரராகவர் கோவிலில் நடைபெற்ற தை பிரம்மோற்சவ விழா, நேற்று கொடியிறக்கத்துடன் நிறைவடைந்தது. நுாற்றி எட்டு திவ்ய தேசங்களில் ஒன்றான திருவள்ளூர் வீரராகவர் கோவிலில், 13ம் தேதி, தை பிரம்மோற்சவ விழா துவங்கியது. காலை, மாலை இரு வேளையிலும், பல்வேறு வாகனங்களில் உற்சவர் வீதி புறப்பாடு நடைபெற்றது.தை பிரம்மோற்சவத்தின் நிறைவு நாளான, நேற்று பகல், 12:30 மணிக்கு, த்வாதஸ ஆராதனமும், வெட்டிவேர் சப்பரத்தில் பெருமாள் புறப்பாடு, இரவு, 8:00 மணிக்கும், கொடியிறக்கம் (த்வஜ அவரோஹணம்) இரவு, 10:30 மணிக்கும் நடைபெற்றது. இதையடுத்து, பிரம்மோற்சவ விழா நேற்றுடன் நிறைவு பெற்றது.