மதுர காளியம்மன் கோவிலில் கும்பாபிஷேக விழா
ADDED :2824 days ago
தலைவாசல்: தலைவாசல் அருகே, மதுர காளியம்மன் கோவில் கும்பாபி?ஷக விழா விமரிசையாக நடந்தது. தலைவாசல், வீரகனூரில் அமைந்துள்ள மதுர காளியம்மன் ஆலயம் பழமையானது. கோவிலை புதுப்பிக்கும் பணிகள் நடந்து வந்தன. ஆலயத்தின் மேல்புறம், விமான கட்டுமான பணிகள் நிறைவடைந்ததையடுத்து, கடந்த, 19ல் விநாயகர் பெருவேள்வியுடன் விழா தொடங்கியது. கடந்த மூன்று நாட்களாக, சிறப்பு பூஜைகளுடன், வேள்விகள் நடந்து வந்தன. நேற்று காலை, 10:00 மணியளவில், சிவாச்சாரியார்கள் வேதமந்திரம் முழங்க, மதுர காளியம்மன், சக்தி கணபதி மற்றும் துணை தெய்வங்களுக்கு, கும்பாபி?ஷகம் நடந்தது. வீரகனூர் சுற்றுவட்டாரங்களை சேர்ந்த, பக்தர்கள் அம்மன் அருள் பெற்றனர்.