உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சாய்பாபா கோவில் கும்பாபிஷேகம்

சாய்பாபா கோவில் கும்பாபிஷேகம்

மொடக்குறிச்சி: மொடக்குறிச்சி, நஞ்சை ஊத்துக்குளி பஞ்., கணபதி நகரில், சென்னப்பநாயக்கன் பாளையத்தில், ஷீரடி சாய்பாபா ஞானியத்யான பீட மஹா கும்பாபி?ஷகம், நேற்று காலை நடந்தது. இதையொட்டி சத்ய சாய்பாபா பிம்பம் மற்றும் சிவன், விநாயகர், சனீஸ்வர பகவான் உள்ளிட்ட பீடங்களுக்கு விநாயகர் பூஜை, புண்யாகம், பஞ்சகாவ்ய பூஜை, ஆதித்யாதி நவக்கிர ஹோமம், மஹாபூர்ணாகுதி நேற்று முன்தினம் நடந்தது. சிவஸ்ரீ குருமூர்த்தி தலைமையிலான சிவாச்சாரியர்கள், நேற்று காலை பல்வேறு அபி?ஷகம் செய்தனர். பின், தியான பீட திருக்கோவில் கலசங்களுக்கு மஹா கும்பாபி?ஷகம் நடந்தது. இதில், 500க்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !