சந்தனம் கூட சுடும்
ADDED :3132 days ago
பக்தர்களுக்கு அன்னம் அளிக்கும் சமாராதனை நிகழ்ச்சி நடந்தது. அங்கிருந்தவெங்கட பட்டரை கண்ட கிராம அதிகாரி, “என்னப்பா! சும்மா நின்னா எப்படி? சந்தனத்தை அரைத்திடு!” என்று அதிகார தொனியுடன் கட்டளையிட்டார். ‘அக்னி சூக்தம்” என்னும் மந்திரம் ஜெபித்தபடி சந்தனத்தை அரைத்து கொடுத்தார் பட்டர். அதை பூசிய அனை வரும், உடம்பில் தீப்பட்டது போல துடித்தனர். விஷயம் அறிந்த கிராம அதிகாரி, “இது வெங்கடபட்டரின் வேலை தான்!” என்பதை உணர்ந்து கொண்டார். தெய்வீக சக்தி மிக்க அவரிடம், ‘உங்களின் மகத்துவம் தெரியாமல் நடந்த என்னை மன்னியுங்கள்” என்று வேண்டினார். வெங்கடபட்டர் வருண சூக்த மந்திரம் சொல்ல, சந்தனம் பூசியவர்களின் உடம்பில் குளிர்ச்சி பரவியது. பிற்காலத்தில் இந்த வெங்கடபட்டர் தான் “குரு ராகவேந்திரர்” என போற்றப்பட்டார்.