உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஊருக்கு உழைத்தால் யோகம்

ஊருக்கு உழைத்தால் யோகம்

*  ஊருக்கு நல்லது செய்யும் விதத்தில் உழைப்பவன் யோகசாலி. அவன் கடவுளுக்கே பணி செய்த பாக்கியம் பெறுகிறான்.
*  கடவுளுக்கு செய்யும் தொண்டு, ஆசிரியர்களுக்கு செய்யும் சேவை, பக்தர்களுக்கு செய்யும் பணி ஆகிய மூன்றும் புண்ணியம் மிக்கதாகும்.
*  முன்னோர் நமக்காக எழுதி வைத்த நூல்களிலுள்ள கருத்துகளை முழுமையாக ஏற்க வேண்டும். சாதாரண நூல்கள் சொல்வதை ஏற்க வேண்டியதில்லை.
*  கோபுரங்களை,  கோயில்களின் விமானங்களை கண்டவுடனேயே எழுந்து நின்று வணங்க வேண்டும்.
*  வயிறு வளர்ப்பதில் மட்டும் கவனம் செலுத்துபவருடன் நட்பு பாராட்டாதே. பிறர் மீது குற்றம் சொல்பவருடன் பேசாதே.
*  பகவானுக்கு நிவேதனம் செய்யாத உணவை சாப்பிடாதே. நீ விரும்பியதை எல்லாம், பெருமாளுக்கு நிவேதனம் செய்யாதே. புனித நூல்களில் சொல்லப்பட்டுள்ள பொருட்களை நிவேதனம் செய்.
*  கடவுளுக்கு படைத்த உணவு, நீர், சந்தனம், மலர், தாம்பூலம் ஆகியவற்றை பிரசாதமாக கருத வேண்டும்.
சொல்கிறார் ராமானுஜர்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !