தடை தகர்க்கும் செந்தூரான்
ADDED :2932 days ago
இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் குரு பரிகாரத் தலமாகும். முருகனை வழிபடும் வாய்ப்பை குருபகவான் எதிர்பார்த்து காத்திருந்தார். அந்நிலையில் சூரபத்மனுடன் போருக்குச் செல்லும் முன் குருவிடம், அசுரர் வரலாறை கேட்க வந்தார் முருகன். அப்போது முருகனை பூஜிக்கும் பேறு பெற்றார் குரு. அது முதல் இத்தலம் ‘வியாழ க்ஷேத்திரம்” என பெயர் பெற்றது.
“என் இதயத்தில் வாழ்பவனே! சீறிப்பாயும் அலைகடல், உன் சன்னதியில் வலுவிழந்து கிடப்பது போல, உன்னை வந்து தரிசிப்போரின் வாழ்வில் குறுக்கிடும் துயர அலைகள் மறைந்தோடும்” என்று ஆதிசங்கரர், முருகனின் பெருமையை குறிப்பிடுகிறார். வியாழக்கிழமையில் கடலில் நீராடி முருகனை தரிசிப்போருக்கு குருபலத்தால் தடை நீங்கும்.