கணவாய் மாரியம்மன் கோவில் திருவிழா
ADDED :2872 days ago
கடத்தூர்: கடத்தூரில், கணவாய் மாரியம்மன் கோவில் திருவிழா நேற்று நடந்தது. தர்மபுரி மாவட்டம், கடத்தூர் அடுத்த மணியம்பாடி மாரியம்மன் நகர்பதியில், கணவாய் மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. பல மாவட்டங்களில் இருந்து, ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து, செவ்வாய் அன்று, நேர்த்திக் கடனை நிறைவேற்றுவது வழக்கம். நடப்பாண்டு, தை மாத செவ்வாய்கிழமையை முன்னிட்டு, நேற்று திருவிழா வெகு விமர்சையாக நடந்தது. கணவாய் மாரியம்மன் சுவாமிக்கு சிறப்பு அலங்காரம், அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடந்தன. அலங்கரிக்கப்பட்ட தேரில், ஊர்வலமாக வந்த சுவாமி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.