அரசமங்கலம் கோவிலில் திருநட்சத்திர மகோற்சவம்
ADDED :2814 days ago
விழுப்புரம் : அரசமங்கலம் ஸ்ரீவரதராஜ பெருமாள் கோவிலில் 34வது ஆண்டு திருநட்சத்திர வைபவ மகோற்சவம் நடக்கிறது. விழுப்புரம் அடுத்த அரசமங்கலத்தில் உள்ள ஸ்ரீ பெருந்தேவி நாயகா சமேத ஸ்ரீ வரதராஜ பெருமாள் கோவிலில், வரும் 30ம் தேதி, 34வது ஆண்டு திருநட்சத்திர வைபவ மகோற்சவம் நடக்கிறது. இதையொட்டி, அன்று காலை 10:30 மணி முதல் பகல் 12:30 வரை ஸ்ரீ லட்சுமி மகா சுதர்சன ேஹாமம் நடக்கிறது. குடும்பத்தில் உள்ள கஷ்டங்கள், தடங்கல், சங்கடங்கள மற்றும் தோஷங்கள் நீங்கவும், சிறப்பு ேஹாமம் நடக்கிறது. வீடு, அலுவலகம், வாகனங்களில் வைத்து கொள்ள ேஹாம பஸ்பம் வழங்கப்படுகிறது. ஏற்பாடுகளை வெங்கடேஷ்பாபு தலைமையில், அப்பகுதி மக்கள் செய்து வருகின்றனர்.