உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கடுவனூரில் பெரியாண்டவர் வழிபாடு

கடுவனூரில் பெரியாண்டவர் வழிபாடு

மூங்கில்துறைப்பட்டு : மூங்கில்துறைப்பட்டு அருகே உள்ள கடுவனுாரில் பெரியாண்டவர் வழிபாடு விழா நடந்தது. மூங்கில்துறைப்பட்டு அடுத்த கடுவனுார் ஏரிக்கரையில் அமைந்துள்ள பெரியாண்டவருக்கு நேற்று வழிபாடு பூஜை நடந்தது. இப்பூஜையில், இப்பகுதியை சுற்றியுள்ள பொதுமக்கள் திரளாக கலந்துக்கொண்டு மண்ணால் உருவம் அமைத்து, மலர், கனி மற்றும் வாசனை திரவியங்களால் பூஜை செய்தனர். இந்நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்துக்கொண்டு சுவாமியை வழிபட்டனர். பூஜையினை ஹரி அய்யர் செய்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !