ஈச்சம்பாடியில் மகோத்சவம்
ADDED :2814 days ago
ஆர்.கே.பேட்டை: பள்ளிப்பட்டு அருகே, கொற்றலை ஆற்றங்கரையில் அமைந்துள்ள கிராமம், ஈசனை பாடி எனும் ஈச்சம்பாடி. இங்குள்ள விஜயராகவ பெருமாள் கோவில், புதுப்பிக்கப்பட்டு, கும்பாபிஷேகம் நடந்தது. ஆண்டுதோறும் நடத்தப்படும் ஈச்சம்பாடி ஆச்சானின், 993ம் மகோத்சவம், வரும் 5ம் தேதி, நடைபெற உள்ளது. அன்று பகல், 12:00 மணிக்கு, சாற்றுமறையும் நடைபெற உள்ளது.