திருப்பரங்குன்றத்தில் தெப்பத் திருவிழா தேரோட்டம் கோலாகலம்
ADDED :2871 days ago
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயில் தை தெப்பத்திருவிழாவை முன்னிட்டு தேரோட்டம் கோலாகமாக நடைபெற்றது.
தெப்பத் திருவிழாவின் 9ம் நாளான வெள்ளிக்கிழமை சர்வ அலங்காரத்தில் தெய்வானையுடன் சுப்பிரமணிய சுவாமி 16 கால் மண்டபத்தின் அருகே உள்ள சட்டத் தேரில் எழுந்தருளினர். பக்தர்கள் வடம் பிடிக்க தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.