பால நாகம்மா கோவில் கும்பாபிஷேகம்
ADDED :2814 days ago
மடத்துக்குளம் : மடத்துக்குளம் அருகே கடத்துாரில் நடந்த, பால நாகம்மா கோவில் கும்பாபிஷேகத்தில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர். மடத்துக்குளம் அருகே குருவன்வலசில், பால நாகம்மா அம்மனுக்கு புதியதாக கோவில் கட்டப்பட்டது. இக்கோவிலில், கும்பாபிேஷக விழா நேற்றுமுன்தினம் மங்கள இசையுடன் தொடங்கியது. தொடர்ந்து விநாயகர் வழிபாடு, கணபதி ஹோமம், பஞ்ச காவ்யம், வாஸ்து சாந்தி, முதற்கால யாகபூஜை நடந்தது. நேற்று, காலை, 7:00 மணிக்கு இரண்டாம் கால யாகபூஜை, மற்றும் சிறப்பு ஹோமம் செய்த பின், 9:50 மணிக்கு கும்பாபிேஷகம் நடந்தது. இதில், கடத்துார் மற்றும் சுற்றுப்புற கிராமங்களிலிருந்து திரளான பக்தர்கள் பங்கேற்றனர். கும்பாபிஷேகத்திற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.