உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருப்பரங்குன்றம் பழநி ஆண்டவர் கோயிலில் தைப்பூசம்

திருப்பரங்குன்றம் பழநி ஆண்டவர் கோயிலில் தைப்பூசம்

திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலின் துணை கோயிலான பழநி ஆண்டவர் கோயிலில் நாளை மறுநாள் (ஜன., 31) தைப்பூச திருவிழா நடக்கிறது. மலைக்குப் போகும் பாதையில் அடிவாரத்தில்இக்கோயில் உள்ளது. மூலவர் பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் எழுந்தருளியதை போல உள்ளார். தைப்பூசத்தையொட்டி நாளை(ஜன., 30) உச்சிகால பூஜை முடிந்து, சுப்பிரமணிய சுவாமிகோயிலில் இருந்து பூஜைப்பொருட்கள் எடுத்து செல்லப்படும். மூலவருக்கு 100 லிட்டர் பால் உட்பட பல்வகை அபிஷேகங்கள் நடத்தப்படும். பின் ராஜ அலங்காரத்தில் சுவாமி அருள்பாலிப்பார்.பூசத்தன்று சிறப்பு வழிபாடுகள் நடக்கின்றன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !