ஷீரடி சாயிபாபா கோயில் வருஷாபிஷேக விழா
ADDED :2863 days ago
ராஜபாளையம்: ராஜபாளையம் ஷீரடி சாயிபாபா கோயில் இரண்டாம் ஆண்டு வருஷாபிஷேக விழாவினை முன்னிட்டு சாயி அன்னதான மண்டபம் திறப்பு விழா, திருவாசகம் முற்றோதல் விழா நடந்தது. அன்னதான மண்டபத்திற்கு விக்னேஸ்வர பூஜை, கணபதி ஹோமம் மற்றும் பூஜைகள் நடைபெற்றது. தினமும் துாப ஆரத்தி, சங்கல்பம், சாயி சகஷ்ர நாம அர்ச்சனை, சாயி பல்லக்கு உற்ஸவ சேவை நடந்தது. கடைசி நாள் வேலாயுதராஜா வேதாந்தப்பாடசாலை மற்றும் சேக்கிழார் மன்றம் அறக்கட்டளை சார்பில், திருவாசகம் முற்றோதல் நிகழ்ச்சி நடைபெற்றது. திரளான பக்தர்கள் அருள் பெற்றனர். ஏற்பாடுகளை ஷீரடி சாயி சேவா சமிதி மற்றும் சாயி சாரிட்டிஸ் செய்திருந்தனர்.