ஸ்தலசயன பெருமாள் கோவிலில் ஆழ்வார் திருநகரி ஜீயர் வழிபாடு
ADDED :2917 days ago
மாமல்லபுரம் : திருநெல்வேலி மாவட்டம், ஆழ்வார்திருநகரி கோவில் ஜீயரான சடகோப ராமானுஜர், நேற்று முன்தினம், இக்கோவில் வந்து, ஸ்தலசயன பெருமாள், நிலமங்கை தாயார், பூதத்தாழ்வார் உள்ளிட்டோரை தரிசித்து வழிபட்டு, பக்தர்களுக்கு ஆசி வழங்கினார். இங்குள்ள பூதத்தாழ்வார் அவதார நந்தவனத்தில், வைகாசி மாதம் கடந்து, பூதத்தாழ்வாருக்கு சிறப்பு திருமஞ்சனம் நடத்த இருப்பதாகவும், கோவில் நிர்வாகத்திடம் தெரிவித்தார்.