உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பழநி ஆண்டவர் கோவில் கும்பாபிஷேகம் கோலாகலம்

பழநி ஆண்டவர் கோவில் கும்பாபிஷேகம் கோலாகலம்

இடைப்பாடி: பழநி ஆண்டவர் கோவில் கும்பாபிஷேகம் கோலாகலமாக நடந்தது. இடைப்பாடி அருகே, கோனேரிப்பட்டி ஊராட்சி, கைக்கோல்பாளையத்தில், பழநி ஆண்டவர் கோவில் உள்ளது. இரு ஆண்டுகளுக்கு மேலாக நடந்து வந்த, அதன் கட்டடப் பணி முடிந்து, கும்பாபிஷேக விழா, கடந்த வாரம் துவங்கியது. நேற்று முன்தினம், தீர்த்தக்குட ஊர்வலம் நடந்தது. நேற்று காலை, ஆச்சாரியார்கள் கோபுர கலசங்களுக்கு புனிதநீர் ஊற்றி, கும்பாபிஷேகம் நடத்தி வைத்தனர். இதில், சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த, ஆயிரக்கணக்கான பக்தர்கள், சுவாமியை தரிசித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !