கஸ்பா வரதராஜ பெருமாள் கோவில் கும்பாபிஷேகம்
ADDED :2911 days ago
மொடக்குறிச்சி: மொடக்குறிச்சி, கஸ்பாபேட்டையில், பழங்கால ஸ்ரீதேவி பூதேவி சமேத வரதராஜ பெருமாள் கோவில் உள்ளது. கும்பாபிஷேகம் செய்ய முடிவு செய்து, திருப்பணிகள் நடந்தன. இது முடிந்த நிலையில், கும்பாபிஷேக விழா நிகழ்வுகள், நேற்றுமுன் தினம் தொடங்கியது. மதுரை திருநகர் பார்த்தசாரதி பட்டாச்சாரியார் தலைமையிலான குழுவினர், நேற்று காலை, கலசங்களுக்கு புனித நீர் ஊற்றி மஹா கும்பாபிஷேகம் நடத்தினர். விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.