கண்ணப்ப நாயனாருக்கு சிறப்பு பூஜை
ADDED :3146 days ago
கொடுமுடி: மகுடேஸ்வரர் கோவிலில், கண்ணப்ப நாயனாருக்கு சிறப்பு பூஜை நடந்தது. பிரசித்தி பெற்ற பரிகார ஸ்தலங்களுள் ஒன்றான, கொடுமுடி மகுடேஸ்வரர் கோவிலில், வேட்டுவக் கவுண்டர் இளைஞர் நலசங்கம் சார்பாக, கண்ணப்ப நாயனார் குரு பூஜையை முன்னிட்டு, சிறப்பு பூஜை நடந்தது. ராஜ் கவுண்டர் முன்னிலை வகித்தார். முன்னதாக கோவில் வளாகத்தை சுற்றி, ஊர்வலம் நடந்தது. கொடுமுடி சுற்று வட்டார பகுதி வேட்டுவக்கவுண்டர் சமூகத்தினர் மற்றும் மக்கள் கலந்து கொண்டனர்.