புதிய தேர் வெள்ளோட்டம்
ADDED :2913 days ago
அருப்புக்கோட்டை:அருப்புக்கோட்டை புளியம்பட்டி- திருநகரம் சாலியர் மகாஜன பரிபாலன சபைக்கு பாத்தியப்பட்ட புதிய திரு தேர் வெள்ளோட்ட விழா நேற்று நடந்தது. 10 டன் எடை உள்ள இத்தேர் தேக்கு மற்றும் இலுப்பை மரத்தால் செய்யப்பட்டது. தேரை சுற்றி அம்மன் அவதாரங்கள், குல தெய்வங்கள் செதுக்கப்பட்டுள்ளன. முக்கிய வீதிகளில்வலம் வர முக்கிய பிரமுகர்கள் வடம் பிடித்தனர். ஏற்பாடுகளை உறவின் முறை தலைவர் சுப்பிரமணியம் தலைமையில் விழா குழுவினர் செய்தனர். உறவின்முறை தலைவர் சுப்பிரமணியம், இத் தேர் கலை நயத்துடன் 3 மாதங்களுக்குள் வடிவமைக்கப்பட்டுள்ளதால், கின்னஸ் சாதனைக்காக பதிவு செய்யப்பட்டுள்ளது. என்றார்.