உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கும்பாபிஷேகம் முன்னிட்டு புதிய கொடிமரம் அமைப்பு

கும்பாபிஷேகம் முன்னிட்டு புதிய கொடிமரம் அமைப்பு

தாரமங்கலம்: கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, கைலாசநாதர் கோவிலில், கொடிமரம் அமைக்கப்பட்டது. தாரமங்கலம், கைலாசநாதர் கோவிலில், 200 ஆண்டுகளுக்கு முன் அமைக்கப்பட்ட கொடிமரம் சிதிலமடைந்தது. அதை, எட்டு மாதங்களுக்கு முன்பு, அதிகாரிகள் அப்புறப்படுத்தினர். ஏப்., 22ல், கோவில் கும்பாபி?ஷகம் நடக்க உள்ளதால், வேங்கை மரத்தில், 41 அடி உயர கொடிமரம் உருவாக்கப்பட்டது. கடந்த இரு நாட்களாக, வாஸ்து பூஜை, கணபதி ஹோமம் நடந்தது. நேற்று காலை, 6:30 மணிக்கு, புதிய கொடிமரம் நடப்பட்டது. முன்னதாக, பழைய கொடிமரம் அகற்றியபோது, அதன் கீழிருந்து கைப்பற்றிய பழங்கால நாணங்கள், தகடுகள், புதிய மரத்தின் அடியில் வைக்கப்பட்டன. சங்ககிரி எம்.எல்.ஏ., ராஜா, இந்து அறநிலையத்துறை உதவி ஆணையர் (நகை சரிபார்ப்பு) குமரேசன், கொடிமரம் உபயதாரர் கண்ணன் உள்பட பலர் பங்கேற்றனர்.



தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !