/
கோயில்கள் செய்திகள் / ஆலங்குடியில் சிவலிங்கத்தின் சூரிய ஒளி: ஜொலித்த மூலவரை கண்டு பக்தர்கள் தரிசனம்
ஆலங்குடியில் சிவலிங்கத்தின் சூரிய ஒளி: ஜொலித்த மூலவரை கண்டு பக்தர்கள் தரிசனம்
ADDED :46 days ago
புதுக்கோட்டை; ஆலங்குடியில் இரண்டாவது குரு ஸ்தலமாக திகழும் தர்மசம்வர்தினி அம்பாள் சமேத நாமபுரீஸ்வரர் கோவிலில் சிவலிங்கத்தின் மீது சூரிய ஒளி விழும் கட்சி இன்று காலை 7.00 மணியளவில் நடைபெற்றது. இதனை பக்தர்கள் கண்டு தரிசனம் செய்தனர்.
ஆலங்குடி நாமபுரீஸ்வரர் கோவிலில், மூலவர் மீது சூரிய ஒளி பட்டு, அபிஷேகம் செய்வது போன்ற சம்பவத்தை, பொதுமக்கள் தரிசித்தனர். இரண்டாவது குருஸ்தலமாக விளங்கும் ஆலங்குடி சிவன் கோவிலில், லிங்க வடிவில் எழுந்தருளிய நாமபுரீஸ்வரர் மீது நேரடியாக சூரியஒளி படும். இன்று காலை நடைபெற்றது. கோபுர வாசல் வழியாக பாய்ந்த சூரிய ஒளி, நேரடியாக நாமபுரீஸ்வர் மீது அபிஷேகம் செய்வது போல விழுந்தது. இதனால், ஜொலித்த மூலவரை ஏராளமான பக்தர்களும், பொதுமக்களும் வணங்கினர்.