சென்னிமலை முருகன் கோவில் தேர் நிலை சேர்ந்தது
சென்னிமலை: சென்னிமலை முருகன் கோவில் தேர், நேற்று நிலை சேர்ந்தது. ஈரோடு மாவட்டத்தில், புகழ் பெற்ற முருகன் தலமாக திகழும் சென்னிமலையில், தைப்பூச விழா நடந்து வருகிறது. நேற்று முன்தினம் தேரோட்டம் தொடங்கியது. நகரில் நான்கு ரத வீதிகளையும் திருத்தேர் வலம் வந்து நேற்று மாலை, 6:00 மணிக்கு நிலை தேர்ந்தது. இன்று இரவு பரிவேட்டை குதிரை வாகன காட்சி நடக்கிறது. நாளை இரவு தெப்போற்சவம், பூத வாகனக்காட்சி நடக்கிறது. மகா தரிசனம், 4ல் நடக்கிறது. அன்று காலை, 10:00 மணிக்கு வள்ளி, தெய்வானை சமதே முத்துகுமாரசாமிக்கு சிறப்பு மகா அபிஷேகம் நடக்கிறது. அதை தொடர்ந்து இரவு, 7:00 மணிக்கு நடராஜ பெருமான், சுப்பிரமணிய சுவாமியும் முறையே வெள்ளி விமானம், வெள்ளி மயில் வாகனத்தில் எழுந்தருளி, வீதி உலா காட்சி இரவு முழுவுதும் நடக்கும். இதைக்காண லட்சக்கணக்கான பக்தர்கள் கூடுவர். 5ம் தேதி மஞ்சள் நீர் அபிஷேகத்துடன், விழா நிறைவு பெறுகிறது.