பெண்கள் மட்டுமே வடம் பிடித்த குமாரசாமிப்பேட்டை முருகன் கோவில் தேர்
                              ADDED :2828 days ago 
                            
                          
                           தர்மபுரி:  குமாரசாமிப்பேட்டை சிவசுப்பிரமணிய சுவாமி கோவிலில், தைப்பூசத்தையொட்டி, நேற்று தேர்த்திருவிழா நடந்தது. இதில் பெண்கள் மட்டுமே வடம் பிடித்து, தேர் இழுத்து சுவாமியை வணங்கினர்.
குமாரசாமிப்பேட்டை சிவசுப்பிரமணிய சுவாமி கோவில், தைப்பூச தேர்த்திருவிழா, கொடியேற்றத்துடன் துவங்கி நடைபெற்றுவந்தது. விழாவின் முக்கிய நாளான நேற்று(பிப். 1ல்) காலை, 7:30 மணிக்கு, பெண்கள் மட்டுமே வடம் பிடித்து தேர் இழுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், வள்ளி, தெய்வானையுடன், ராஜ அலங்காரத்தில், தேரில்  சுப்பிரமணிய சுவாமி வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.  ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.