உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மதுரை மீனாட்சி கோயிலில் மாசி உற்ஸவ விழா கொடியேற்றத்துடன் துவக்கம்

மதுரை மீனாட்சி கோயிலில் மாசி உற்ஸவ விழா கொடியேற்றத்துடன் துவக்கம்

மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் மாசி மண்டல உற்ஸவ கொடியேற்றம் இன்று (பிப்.,2) காலை 9:00 முதல் காலை 9:54 மணிக்கு கொடியேற்றத்துடன் துவங்கியது.

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் மாசி திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. விழாவில் அம்மன், சுந்தரேஸ்வரர் பிரியாவியையிடன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏராளமான பகத்ர்கள் தரிசனம் செய்தனர். விழாவை முன்னிட்டு இன்று முதல் விநாயகர், சுப்பிரமணியர், முதல் மூவர், சந்திரசேகரர் உற்ஸவமும், பிப்., 20 சுற்றுக் கொடியேற்றம் ஆகி அன்று இரவு முதல் மார்ச் 1 வரை காலை, இரவில் சித்திரை வீதிகளில் அம்மன், சுவாமி வீதி உலா வந்து கோயில் சேர்த்தியாவர். மார்ச் 11 கொடியிறக்கி கணக்கு வாசித்தல் நடந்து உற்ஸவம் முடிகிறது. இன்று முதல் மார்ச் 1 மற்றும் மார்ச் 11 கோயில் சார்பாகவும், உபயமாகவும், மீனாட்சி அம்மனுக்கு உபய தங்கரதம் உலா, உபய திருக்கல்யாணம் போன்ற விஷேசங்கள் பதிவு செய்து நடத்திட இயலாது என இணை கமிஷனர் நடராஜன் தெரிவித்துள்ளார். உற்ஸவ ஏற்பாடுகளை தக்கார் கருமுத்து கண்ணன், இணை கமிஷனர் செய்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !