உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மல்லிகேஸ்வரர் கோவிலுக்கு மயில் வாகனம் நன்கொடை

மல்லிகேஸ்வரர் கோவிலுக்கு மயில் வாகனம் நன்கொடை

மாமல்லபுரம்,: மல்லிகேஸ்வரர் கோவிலுக்கு, மயில் வாகனம், நன்கொடையாக அளிக்கப்பட்டது. மாமல்லபுரம், மல்லிகேஸ்வரி அம்பிகை உடனுறை மல்லிகேஸ்வரர் கோவிலில், கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் கும்பாபிஷேகம் நடந்தது.இக்கோவிலில் வீற்று உள்ள, சுவாமி, அம்பாள், பிரணவ விநாயகர், முருகர், உற்சவ வீதியுலா செல்ல, ரிஷபம், மூஞ்சுறு, மயில் வாகனங்கள், பக்தர்கள் நன்கொடை வழங்க, நிர்வாகம் வேண்டுகோள் விடுத்தது. இதையடுத்து, ரிஷப, மூஞ்சுறு வாகனங்கள் அளிக்கப்பட்டன. தற்போது, மர சிற்பக்கலைஞர் இ.குப்புசாமி, மயில் வாகனத்தை, நன்கொடையாக அளித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !