பழநிக்கு பக்தர்கள் பாதயாத்திரை: 15 இடங்களில் போலீஸ் பாதுகாப்பு
ADDED :2823 days ago
இடைப்பாடி: இடைப்பாடியிலிருந்து, ஏழு குழுக்களாக, 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர், நடைப்பயணமாக, பழநிக்கு செல்கின்றனர். குறிப்பாக, வீட்டில் உள்ளவர்கள் பெரும்பாலும் செல்கின்றனர். இதனால், வீடுகள், பூட்டப்பட்டுள்ளன. குற்றச்செயல்கள் நடக்காதபடி கண்காணிக்க, அங்காளம்மன் கோவில் தெரு, கவுண்டம்பட்டி குமரன் தியேட்டர் பிரிவு, பிள்ளையார் கோவில் பிரிவு, புதைப்பேட்டை, ஏரிரோடு, க.புதூர், தாவாந்தெரு உள்பட, 15 இடங்களில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சுழற்சி முறையில், 60 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவர். நேற்று துவங்கி, வரும், 12 வரை, இப்பாதுகாப்பு இருக்கும் என, போலீசார் தெரிவித்தனர்.