சின்னசேலம் கன்னிகா பரமேஸ்வரி கோவிலில் 27 நட்சத்திர பூஜை
ADDED :2881 days ago
சின்னசேலம்: சின்னசேலம் கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோவிலில், 27 நட்சத்திர பூஜை நடந்தது.சின்னசேலம் கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோவிலில் தை மாதம் 3வது வெள்ளியை முன்னிட்டு 27 நட்சத்திர பூஜையும், வெள்ளி குத்துவிளக்கு பூஜையும் நடந்தது. மூலவர் சுவாமிக்கு தங்க கவச அலங்காரமும், 27 நட்சத்திர வடிவங்கள் அமைத்து, பல வண்ண கோலம் இட்டு, லலிதா சகஸ்ராமம் வாசித்து, பெண்கள் சுவாமிக்கு வெஞ்சாமரம் வீசி பூஜைகள் செய்தனர்.பூஜைகளை சின்னசேலம் மகிளா விபாக், வாசவி வனிதா கிளப் சங்க உறுப்பினர்கள் தொடர்ந்து செய்து சுவாமியை வழிபட்டனர்.