பழநி கோயிலில் பக்தர்கள் 4 மணிநேரம் காத்திருந்து சுவாமி தரிசனம்
ADDED :3114 days ago
பழநி: தைப்பூசவிழா மற்றும் ஞாயிறு விடுமுறைதினத்தை முன்னிட்டு, பழநி முருகன் கோயிலில் அதிகாலை முதல் குவிந்த பக்தர்கள் நான்கு மணிநேரம் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர். தைப்பூசவிழாவை நேற்றுடன் முடிந்தாலும், பழநிமுருகன் கோயிலுக்கு மதுரை, சிவகங்கை, திருப்பூர், கோவை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து ஏராளமான பாதயாத்திரை பக்தர்கள், காவடிகள், பால்குடங்களுடன் வந்த வண்ணம் உள்ளனர். நேற்று ஞாயிறு பொதுவிடுமுறையில் மலைக்கோயிலில் அதிகாலை முதல் குவிந்த பக்தர்கள் ‘ரோப்கார்’, வின்ச் ஸ்டேஷனில் இரண்டு மணிநேரத்திற்கு மேலாக வரிசையில் காத்திருந்தனர். மலைக்கோயில் பொதுதரிசனம் வழியில் நான்குமணிநேரம் வரை காத்திருந்து மூலவரை தரிசனம் செய்தனர். தங்கரதப்புறப்பாட்டை காண ஏராளமான பக்தர்கள் திரண்டனர்.