பூசிவாக்கம் மண்டலேஸ்வரர் கோவிலில் துாய்மை பணி
ADDED :16 hours ago
காஞ்சிபுரம்: பூசிவாக்கம், பாவாசாபேட்டையில் உள்ள மண்டலேஸ்வரர் கோவிலில், காஞ்சி நால்வர் நற்பணி குழுவினர் நேற்று, துாய்மை பணி மேற்கொண்டனர்.
வாலாஜாபாத் ஒன்றியம், பூசிவாக்கம் ஊராட்சி, பாவாசாபேட்டையில், 1,000 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட மண்டலேஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலில் காஞ்சி நால்வர் நற்பணி குழுவினர் நேற்று, துாய்மை பணி மேற்கொண்டனர். கோவில் வளாகத்தில் குவிந்திருந்த குப்பையையும், தேவையற்ற செடி, கொடிகளையும் அகற்றினர். கோபுரம், சுற்றுச்சுவரில் வளர்ந்திருந்த செடிகளையும் அகற்றினர். பிற சன்னிதிகளின் விக்ரஹங்களையும், பூஜை பொருட்கள், சுவாமி அலங்கார பொருட்களையும் சுத்தப்படுத்தினர்.