திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் கோவிலில் திருக்கல்யாணம் விமரிசை
ADDED :16 hours ago
திருக்கழுக்குன்றம்: திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர், திரிபுர சுந்தரி அம்மன் திருக்கல்யாணம் நேற்று விமரிசையாக நடந்தது.
ஹிந்து சமய அறநிலையத்துறை கட்டுப் பாட்டில் , திருக்கழுக்குன்றத்தில் உள்ள வேதகிரீஸ்வரர் கோவில் பிரசித்தி பெற்றது. திரிபுரசுந்தரி அம்மனுக்கு, கடந்த 6ம் தேதி ஆடிப்பூர உத்சவம் தொடங்கியது. அஷ்டகந்த மூலிகைகளால் உருவான அம்மனுக்கு, ஆண்டு முழுதும் அவரது பாதங்களுக்கு மட்டுமே அபிஷேகம் செய்யப்படுகிறது. ஓராண்டில் மூன்று நாட்களில் மட்டுமே மஹா அபிஷேகம் செய்யப்படுகிறது. ஆடிப்பூர உத்சவத்தின் இறுதி நாளான நேற்று இரவு, மூலவர் அம்மனுக்கு மஹா அபிஷேகம் செய்யப்பட்டது. மேலும், வேதகிரீஸ்வரர், திரிபுரசுந்தரி அம்மனுக்கு திருக்கல்யாணம் நடந்தது. தொடர்ந்து, பஞ்சமூர்த்தி சுவாமியர் வீதியுலா சென்று, பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.