உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மதுரை மீனாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேகம்; முதல்வர் விஜயை அழைக்க முடிவு

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேகம்; முதல்வர் விஜயை அழைக்க முடிவு

மதுரை; ‘‘மதுரை மீனாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேகம் செப்டம்பர் 17ல் நடைபெற உள்ளது. இதில் பங்கேற்கும்படி முதல்வர் விஜய்க்கு அழைப்பு விடுப்போம்’’ என்று எம்எல்ஏ முஸ்தபா தெரிவித்துள்ளார்.


மத்திய தொகுதி எம்.எல்.ஏ முஸ்தபா நிருபர்களுக்கு அளித்த பேட்டி: மதுரை மீனாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேக விழா 17 ஆண்டுக்கு பின்பு இப்போது தான் நடைபெறுகிறது. அறநிலையத்துறை மானியக் கோரிக்கையில் இந்த கும்பாபிஷேகத்தை தமிழக முதல்வர் வந்து நின்று நடத்தவேண்டும் என்பதையும், நடத்தினால் மதுரையில் இருக்கும் மக்கள் மிகவும் சந்தோஷம் அடைவர் என்றும் சொல்லியிருக்கிறோம். 


இந்த கும்பாபிஷேகத்திற்கு மதுரை மட்டும் அல்லாமல் சுற்றியுள்ள சிவகங்கை, விருதுநகர், தேனி போன்ற மாவட்டங்களுக்கும் பொது விடுமுறை அளிக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. விழாவுக்கு கண்டிப்பாக முதல்வரை அழைப்போம். சட்டசபை மானியக்கோரிக்கையில் பேசும் போது அழைப்பு விடுப்பேன். முதல்வரும் கண்டிப்பாக வருவார். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !