மீனாட்சி சொக்கநாதர் கோயிலில் ஆவணி திருவிழா கொடியேற்றம்
ADDED :15 hours ago
விருதுநகர்: விருதுநகர் மீனாட்சி சொக்கநாதர் கோயிலில் ஆவணி திருவிழா கொடியேற்றம் நேற்று நடந்தது. கொடிமரத்திற்கு அபிஷேகம், தீபாராதனைகள் நடந்தது.
இதையடுத்து தினசரி சுவாமியும், அம்பாளும் ரிஷபம், பூதம், அன்னம், காமதேனு, கைலாசம், யானை, நந்தி உள்பட பல்வேறு வாகனங்களில் நகர்வலம் வந்து பக்தர்களுக்கு அருளாசி வழங்குவர். திருவிழாவின் முக்கிய நிகழ்வான திருக்கல்யாணம் ஆக. 23ல் நடக்கிறது.
மறுநாள் (ஆக.24) தேரோட்டம் நடக்கும். ஆக. 27ல் உற்ஸவ சாந்தியுடன் திருவிழா நிறைவடையும். ஏற்பாடுகளை கோயில் நிர்வாகத்தினர், ஹிந்து சமய அறநிலையத்துறையினர் செய்கின்றனர்.